கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா துவக்கம்!

அந்த வகையில் இந்த 2023 ம் ஆண்டுக்கான வைகாசி திருவிழாவானது கோவிலில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

Update: 2023-05-20 13:38 GMT

சவுந்தரவல்லி அம்பாள் உடன் நின்ற கைலாசநாதர் சுவாமி கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான சிவ ஆலயங்களில் ஒன்று. இது திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள கைலாச புரத்தில் அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த கோவிலாகும்.

மற்ற கோவில்களில் நடைபெறும் வழக்கம் போலவே இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடைபெறும். இங்கும் சீறும் சிறப்புமாக நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த 2023 ம் ஆண்டுக்கான வைகாசி திருவிழாவானது கோவிலில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் அதிகாலையில் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளினர். பின்னர் அவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் வீதி உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. பூஜைகளுக்கு முடிவில் கொடியேற்றம் நடைபெற்றது.

அதன்பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. வைகாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மறுநாள் தீர்த்தவாரி நடைபெற இருக்கிறது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News