நெல்லையில் ஓடை மண் எடுக்கும் கூட்டு துப்புரவு பணி: மேயர், துணை மேயர் ஆய்வு

நெல்லை டவுனில் மழைநீர் வடிகாலில் ஓடை மண் எடுக்கும் கூட்டு துப்புரவு பணியினை மேயர் மற்றும் துணை மேயர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-25 14:48 GMT

நெல்லை டவுனில் மழைநீர் வடிகாலில் ஓடை மண் எடுக்கும் கூட்டு துப்புரவு பணியினை மேயர் மற்றும் துணை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நெல்லை டவுன் வ.உ.சி தெருவில் மழைநீர் வடிகாலில் ஓடை மண் எடுக்கும் கூட்டு துப்புரவு பணியினை மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்படி, மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன் அறிவுரையின்படி இன்று (25-4-22) அலகு எண்-01, புதிய வார்டு எண்-27 (பழைய வார்டு எண்-42) திருநெல்வேலி டவுன் வ.உ.சி தெருவில் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் மண் எடுக்கும் கூட்டு துப்புரவுபணி சுமார் 80 தூய்மை பணியாளர் மூலம் நடைபெற்றது. இப்பணியினை மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாமன்ற உறுப்பினர் உலகநாதன், மாநகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News