ஐடி ரெய்டால் திமுகவை ஒருபோதும் மிரட்ட முடியாது: கனிமொழி எம்.பி.பேச்சு

ஐடி ரெய்டால் திமுகவை ஒருபோதும் மிரட்ட முடியாது, ரெய்டு நடத்த நடத்த திமுகவுக்கு வாக்குகள் அதிகரிக்கும் என்று நெல்லை பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

Update: 2021-04-02 14:00 GMT

நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் ஏஎல்எஸ்.லட்சுமணனை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் திறந்த வெளியில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது;

மக்களுக்கு எந்த பயனும் இல்லாத ஆட்சி அதிமுக ஆட்சி. 10 ஆண்டுகள் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பட வேண்டும். அதிமுகவின் தோல்வி பயத்தால் மாவட்ட செயலாளர் தொடங்கி திமுகவினர் வீடுகளில் ரெய்டு நடக்கிறது.இதெல்லாம் போதாதென திமுக தலைவர், மகள் மருமகன் இல்லங்களில் ரெய்டு நடத்தி பயம் ஏற்படுத்த முடியாது. இந்த ரெய்டு திமுகவினர் பணி செய்ய உத்வேகத்தை கழக தொண்டர்களுக்கு ஏற்படுத்தும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் தூத்துக்குடியில் எனது வீட்டில் நடத்தபட்டது. அது திமுகவிற்கு வாக்குகளை அதிகமாக ஏற்படுத்தியது. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் தான் வெற்றி பெருவார்கள் என ரெய்டு நடத்தி மிரட்டுகிறார்கள். இது பலிக்காது ரெய்டால் திமுகவை மிரட்ட முடியாது

மக்களுக்கு எந்த நனமையயும் மத்திய அரசு செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என பாஜக ஆளும் மாநிலமான உ.பியில் 60 ஆயிரம் வழக்குக்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்படுகிறது.

தனிமெஜரிட்டியில் மத்தியில் ஆளும் பாஜக பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை யார் ஒத்துழைப்பும் இல்லாமல் கொண்டு வரலாம். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து முயற்சியையும் திமுக ஆட்சியில் எடுக்கப்படும் என்று கனிமொழி பேசினார்

Tags:    

Similar News