நெல்லையில் மனித உரிமை ஆணையத்தின் மூலம் 81 வழக்குகளுக்கு தீர்வு

நெல்லையில் கடந்த 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த மனித உரிமை ஆணைய விசாரணை, தளர்வுகளுக்குப்பின் 81 வழக்குகளுக்கு 2 நாட்களில் தீர்வு காணப்பட்டது.

Update: 2021-07-17 06:58 GMT

திருநெல்வேலியில் மனித உரிமை ஆணையம் சார்பில் நடைபெற்ற விசாரணை.

நெல்லையில் கடந்த 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த மனித உரிமை ஆணைய விசாரணை, தளர்வுகளுக்குப்பின்  81 வழக்குகளுக்கு 2 நாட்களில் தீர்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயசந்திரன் தலைமையிலான விசாரணை அமர்வு மாதந்தோறும் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறும். இந்த அமர்வுகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு நடைமுறைகளை அமல்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி முதல் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்று வந்த மனித உரிமை ஆணைய விசாரணை அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனையடுத்து, தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதைனத்தொடர்ந்து, தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தலைமையிலான விசாரணை அமர்வு ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற இரண்டு நாள் விசாரணை அமர்வில், மனித உரிமை மீறல் தொடர்பான 81 வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரிக்கப்பட்டது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி மனுதாரர்களும் வழக்கறிஞர்களும் முககவசம் அணிந்து விசாரணையில் பங்கேற்றனர். விசாரணை அரங்கை மாநகராட்சி அதிகாரிகள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News