முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள்- நெல்லையில் மரக்கன்றுகள் நடும் பணி

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள்- மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-03 10:48 GMT

திருநெல்வேலி ஆட்சியர் வே.விஷ்ணு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி 98வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு திருநெல்வேலி மாவட்டத்தில் 1 இலட்சம் உயரமான மரக்கன்றுக்கள் நடும் பணிகளை, கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கூறும்போது..

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜீன் 03ம் தேதியினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழகத்தை பசுமையாக்கும் வகையில் மாவட்டத்திற்கு 1 லட்சம் உயரமான மரகன்றுக்கள் நட்டு, பசுமையாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் 1,000 ஆயிரம் உயரமான மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவங்கப்படுகிறது. விரைவில் மாவட்ட முழுவதும் மீதமுள்ள 99,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெறும். இன்று ஆலமரம், புங்கன்மரம், வேங்கைமரம், நாவல்மரம், கொடுக்காபுளி மரம்,போன்ற உயரமான மரக்கன்று ரகங்கள் நடப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் முதன்மை,தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநருமான யோகேஷ் சிங், வன பாதுகாவலர் என்.செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதம், வன சரக அலுவலர் பி.கருப்பையா, திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News