பெரியதாழையில் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்

பெரியதாழையில் 80 சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.

Update: 2021-11-29 11:15 GMT

பெரியதாழையில் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

பெரியதாழையில் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மீனவர்கள் போராட்டம்.

நெல்லை மாவட்டம் பெரியதாழையில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த காரணத்தால் தமிழக அரசின் சார்பில் நிரந்தரமாக மறுவாழ்வுத் திட்டத்தின் மூலமாக நிரந்தர வீடு மற்றும் வீட்டு மனைகள் சுமார் 80 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகியும் அவர்களது வீட்டிற்கு பட்டா வழங்காத காரணத்தினால் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் பெரியதாழை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியான பெரியதாழை பகுதியில் 80 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி நாங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News