நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு

Farmers Protest News -வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 08:51 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்.

Farmers Protest News -திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் அளவுக்கு அதிகமாக 50 டி.எம்.சிக்கு மேல் வீணாக கடலில் கலக்கும் இந்த தண்ணீரை வறண்ட பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா பகுதிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதிக்கும் கொண்டு செல்வதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நடப்பட்டு 2010 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

நான்கு கட்டங்களாக இந்த பணிகள் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 369 கோடி ரூபாயில் செலவாகும் என திட்ட மதிப்பில் கணக்கிடப்பட்டது முதல் இரண்டு கட்ட பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆண்டுதோறும் குறைந்த அளவே பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்த பணிகள் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. திட்டமதிப்பீடு 900 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்த நிலையில் தற்போது நான்கு கட்டப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தத் நிலையில் நடைபெற்று முடிந்த கால்வாயில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து வெள்ளோட்டமாக தண்ணீர் கொண்டு செல்லப்படும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் கூறியதாக தெரிகிறது.

இதனிடைய பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதை காரணம் காட்டும் விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் வெள்ள நீர் கால்வாயில் எவ்வாறு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அலுவலக வளாகத்திற்கு நுழைய முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் இடையே வாக்குவாதத்திலும் ஈடுபடும் சூழல் உருவானது. காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்து நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வெள்ள நீர் கால்வாயில் தற்போது தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்தை மீறி வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல விடமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாமிரபரணியில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரை மட்டுமே கொண்டு செல்வதாக தெரிவித்த நிலையில், தற்போது அணையில் உள்ள தண்ணீரை வெள்ளோட்டத்திற்காக கொண்டு செல்வது என்பது தவறான முடிவு. மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நேரத்தில் வெள்ளநீர் கால்வாய் வெள்ளோட்டத்தை நடத்தினால் அது விவசாயிகளை பாதிக்காது. அதை விடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்காத நிலையில் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது தவறானது என்பது விவசாயிகளன் கருத்தாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News