அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்" உறுதி மொழி.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் "சமத்துவ நாள்” உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Update: 2022-04-14 15:21 GMT

ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுக்கப்பட்டது

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப். முன்னாள் சட்டமன்றப் பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.04.2022 அன்று அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 - ஆம் நாளை சமத்துவ நாளாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. என முதலமைச்சர் சட்டமன்ற விதி எண்.110 - ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி இன்று சமத்துவ நாள் உறுதிமொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டுவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப்பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கருடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மணிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன். என்ற உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவகல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இந்தநிகழ்வில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மு.சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், உதவி செயற் பொறியாளர் அருள் நெரிச்செல்வன், உதவிப் பொறியாளர் எஜின் ராகுல் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News