தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நெல்லை மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Update: 2021-08-03 10:12 GMT

நெல்லை மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் நெல்லையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, மோகன், கற்பகம், சுடலைராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவிக்குழுக்கள் மூலம் 1500க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள், கொசு பரவல் கண்காணிப்பு (DBC) தொழிலாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். 2017ம் ஆண்டு முதல் மேற்படி தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 13.39 சதம் வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கண்ட பணத்தை மாநகராட்சி நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை.

மாநகராட்சி தன் பங்காக செலுத்த வேண்டிய 12 சத பணத்தையும் கட்டவில்லை. சுமார் 3 கோடி ரூபாய் தொழிலாளர்களின் பணம் மாநகராட்சி கணக்கிலும் இல்லை என அதிர்சியளிக்கும் தலவல் வருகிறது. இது குறித்து விசாரிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் செய்தி ஊடகத்தில் பதிலளித்துள்ளார்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். இது குறித்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியூ) ஆகஸ்ட் 5 அன்று நடத்தவிருக்கும் மாநகராட்சி முற்றுகை போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கிறது.     

Tags:    

Similar News