எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி நிர்வாகிகள் தேர்வு

நெல்லை தொகுதி அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கபடுவார்கள். புதிய தலைவர் இலியாஸ்

Update: 2021-08-07 14:02 GMT

எஸ்டிபிஐ கட்சி நெல்லை தொகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

2021-2024 ஆண்டுக்கான உட்கட்சி தேர்தல் கிளைகள் முதல் தேசிய தலைமை வரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட நெல்லை தொகுதி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. உட்கட்சி தேர்தல் அதிகாரிகளாக நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, மாநகர் மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். 2018-2021 ஆண்டுகளின் தொகுதி பணிகளின் அறிக்கை சமர்ப்பிக்கபட்டு விவாதம் நடைபெற்றது, புதிய செயற்குழு தேர்வு நடைபெற்றது.

2021-2024 மூன்றாண்டுகளுக்கு நெல்லை தொகுதி தலைவராக சுத்தமல்லி இலியாஸ், செயலாளராக பாட்டபத்து முகம்மது கௌஸ், பொருளாளராக பேட்டை முகம்மது காசிம், துணை தலைவராக டவுண் காஜா, துணை செயலாளர் பேட்டை அசனார், மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினராக மானூர் சேக் அப்துல்லா, அரண்மனை முபாரக் அலி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சேக் முகம்மது சாலி, பேட்டை ஜெய்லானி, போத்தீஸ் முகம்மது பாபு தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய தொகுதி தலைவர் சுத்தமல்லி இலியாஸ் ஆற்றிய ‌ உரையில்:- நெல்லை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வேட்பாளர்கள் களம் இறக்கபடுவார்கள். உட்கட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எஸ்.எ.கனி, பேட்டை முஸ்தபா, கலந்து கொண்டனர். இறுதியாக புதிய செயலாளர் பாட்டபத்து முகம்மது கௌஸ் நன்றி உரை ஆற்றினர்.

Tags:    

Similar News