வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு புதிய வசதி

Update: 2021-04-05 07:30 GMT

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் வசதிக்காக வாக்குச் சாவடி வழிகாட்டி என்ற இணைய தளத்தினை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் வசதிக்காக மாநிலத்திலேயே முதன் முறையாக இணைய வழி வாக்குச் சாவடி வழிகாட்டி என்ற இணைய தளத்தினை திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. https://tirunelvelielections.in என்ற இணைய தளத்திற்கு சென்று சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச் சாவடி எண் ஆகிய விபரங்களுடன் உங்களின் தற்போதைய இருப்பிடத்தையும் குறிப்பிட்டால், நீங்கள் விரும்பும் வாக்குச் சாவடிக்கு செல்லும் வழியையும், அதனுடைய முப்பரிமாணத்தில் வாக்குச் சாவடியின் உட்புற தோற்றத்தையும், மாதிரி வாக்குச் சாவடியின் உட்புற அமைப்பையும் எளிதாக பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News