அம்பாசமுத்திர தனிப்பிரிவு போலீசாரால் தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர்:பரபரப்பு

அம்பாசமுத்திரத்தில் தனிப்பிரிவுி காவலர்களால் தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-07 02:57 GMT

பைல் படம்

நெல்லைமாவட்டம்: அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் லாரி டிரைவர் சரவணன். இவர் மீது குடியிருப்பை காலி செய்ய கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர்.

விசாரணைக்கு வரும் போது தனது மனைவி உமா, இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு,மண்ணெண்ணெய் கேனுடன் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, சரவணனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேன் காவலர்களால் பிடுங்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் லாரி டிரைவர் சரவணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின்  பின்னணியில் இரண்டு தனிப்பிரிவு காவலர்கள்தான் காரணமாக செயல்படுகின்றனர். அதை பொதுதளத்தில் வெளியிட இயலாது. எஸ்பி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்ட ஒழுங்கு போலீசாருக்கும் தனிப்பிரிவு காவலர்களுக்கும் உள்ள பிரச்சனையில் ஒரு குடும்பமே பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு நடவடிக்கை இருக்க வேண்டும் என்கிறார்கள் மணிமுத்தாறு பொதுமக்கள்

Tags:    

Similar News