நெல்லை: வீடுவீடாக சென்று இதுவரை 18 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 6 ஆயிரத்து 561 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 05:30 GMT

நெல்லை மாவட்டத்தில் வீடுவீடாக தேடி சென்று  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில்,  18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி,  சுகாதாரத் துறையால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே 8 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இனி பிரதி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தவும், குறிப்பாக வீடு தேடி சென்று விடுபட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தேவைப்படுபவர்கள் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில், ஒன்பதாவது சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதற்காக மருத்துவக்குழுவினர், வாகனங்களில் கொரோனா தடுப்பூசிகள் உடன் நகர் பகுதி மட்டுமின்றி, கிராமங்களுக்கும் படையெடுத்தனர். ஏற்கனவே, முதல் டோஸ் போட்டு உரிய நாட்களை கடந்தவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை முதல் டோஸ் போடாதவர்களையும் அழைத்து தடுப்பூசி போட்டனர். சில பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

வீடுவீடாக தடுப்பூசி போடும் திட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 6 ஆயிரத்து 561 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது; இதில் 8 லட்சத்து 81 ஆயிரம் 83 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 3 லட்சத்து 25 ஆயிரத்து 478 பேர்,  இரண்டாவது டோஸ் போல் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

Tags:    

Similar News