6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-11 10:17 GMT

சிறப்பு ரயில்களில் கட்டண சலுகை வழங்குவது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு ரயில்களில் கட்டண சலுகை வழங்குவது உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில்களில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் ஏற்கனவே இருந்ததைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும்.

மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வரும் பாதுகாவலர்களுக்கு பிளாட்பாரம் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வசுந்தரி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். குறிப்பாக மூன்று சக்கர வாகனங்கள் வீல் சேர் போன்றவற்றின் உதவியுடன் சில மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் பெண் மாற்றுத்திறனாளிகள் தங்கள் குழந்தைகளுடன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் ரத்து செய், ரத்து செய் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரத்து செய் என்று மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதையொட்டி நெல்லை சந்திப்பு நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News