நெல்லையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு படி வேலை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-10-26 08:18 GMT

தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயில் முன்பு முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடுபடி வேலை வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாற்று திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் கூறும்போது:-

தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், மானூர், ராதாபுரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News