நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் 2ம் நாள். மாநகரின் முக்கிய பகுதிகளில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-05-25 05:26 GMT

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் 2ம் நாள். மாநகரின் முக்கிய பகுதிகளில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே தேவை இன்றி பொதுமக்கள் யாரும் வெளியே வருவதற்கு அனுமதி இல்லை.நெல்லை மாநகரில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நின்று சாலையில் வரும் வாகனங்களின் ஆவணங்களைஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர். . நெல்லை மாநகராட்சி அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் அந்தந்த வார்டு தெருக்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க மாநகர காவல்துறை நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு ரெயில் தச்சநல்லூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர் . இந்த சோதனையை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் மற்றும் துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர்

Tags:    

Similar News