நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

Update: 2022-06-20 07:49 GMT

ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று வழங்கினார். தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10000/-மும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.5000/-மும், ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது அதற்குரிய சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாள்புரம் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, துலுக்கர்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், தலைமைஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News