10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: நெல்லையில் 25,353 பேர் எழுதுகிறார்கள்

நெல்லை மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் 25,353 பேர் எழுதுகின்றனர்

Update: 2022-05-06 05:10 GMT

பிளஸ் டூ பொதுத்தேர்வை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் 25,353 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு தொடங்கியது. தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு தொடங்கியது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று 91 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 96 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதில் 24,562 பள்ளி மாணவர்கள், 11 சிறைக்கைதிகள், 780 தனித்தேர்வர்கள் என மொத்தம் 25,353 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 156 நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர இணை இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் எட்டு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கம்போல் அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1892 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வரும் பத்தாம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News