செப்பறை நடராஜருக்கு சித்திரை திருவோணம் வழிபாடு

செப்பறை அழகிய கூத்தருக்கு சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது !

Update: 2021-05-05 03:59 GMT

மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் அருளும் தலம் செப்பறை. திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் ஊரில் அருள்பாலிக்கும் செப்பரை ஸ்ரீ அழகிய கூத்தர்ருக்கு சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் நேற்று காலை சபாபதி அபிஷேகம் மற்றும் கூத்தரின் அழகிய திருக்காட்சி நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News