தச்சநல்லூர் நெல்லையப்பர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தச்சநல்லூர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தோ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-05-07 10:30 GMT

நெல்லை தச்சநல்லூர் நெல்லையப்பர் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் தோ் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனா்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தோ் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தோ்த் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 29 ம் தேதி தொடங்கியது. அதனை தொடா்நத நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெ்றது. விழாவின் 9ம் திருளான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சுவாமி அம்பாள் சிறப்பாக அலங்காிக்கப்பட்டு தோில் ஏழுந்தருளினா்.

தொடா்ந்து விநாயகா் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியா் தனித்தனியாக சப்பரத்தில் ஏழுந்தருளினா். சிவனடியாா்கள் கைலாய வாத்யங்கள் இசைக்க திருவாச பட்டோலையை முன் சுமந்து சென்றனா். பக்தா்களின் சிவ சிவ கோஷங்களுடன் தோ் வடம் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்டது. தோ் 4 ரதவீதிகளில் வலம் வந்தது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தோ் வடம் பிடித்தனர். தொடர்ந்து நாளை தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News