திருநெல்வேலிக்கு வந்தே பாரத்! ஜூலையிலேயே வரப்போகுதாம்!

Chennai to Tirunelveli Vande Bharat Train Start Date-சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இந்த ஜூலையிலேயே வரப்போகுதாம்!

Update: 2023-07-13 09:03 GMT

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம் 

Chennai to Tirunelveli Vande Bharat Train Start Date-திருநெல்வேலி மக்களே இனி சென்னையிலிருந்து வேற லெவல் வேகத்தில் பயணிக்கப்போகிறோம் நாம். ஆமாங்க நம்ம வந்தே பாரத் டிரெயன்லதான்.

சென்னையிலிருந்து திருநெல்வேலி, திருநெல்வேலியிலிருந்து சென்னை என பயணிப்பவர்களுக்கு சராசரியாக 10 முதல் 11 மணி நேரம் பயண நேரமாக அமைந்துவிடுகிறது. வீட்டிலிருந்து ரயில் நிலையத்தை அடைய ஒரு சில மணி நேரமும் ரயில் நிலையத்திலிருந்து வீடு செல்ல சில மணி நேரமும் என கிட்டத்தட்ட 14, 15 மணி நேரங்கள் இந்த பயணத்தைத் திட்டமிடுவது போல ஆகிவிடுகிறது.

பேருந்துகளில் இதைவிட வேகமாக செல்லமுடியும் என கூறப்பட்டாலும் தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையும் அரசு பேருந்துகளில் சொன்ன நேரத்தில் சென்று சேர்க்காமையும் நடக்கிறது. இதனால் திருநெல்வேலியிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்பவர்களுக்கு இதைவிட கூடுதல் வேகத்தில், இதைவிட சவுகர்யமாக ஒரு பயணத்தை வந்தே பாரத் ரயில் தர முடியும்.

மற்ற ரயில்களை விட கொஞ்சம் கூடுதல் கட்டணமாக இருந்தாலும் பேருந்துகளை விட மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 2 முதல் 2.30 மணி நேரங்கள் பயண நேரம் குறைகிறது. இதனால் இந்த ரயில் எப்போது வரப் போகிறது என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நல்ல செய்தியாக இந்த மாதமே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நாள் எது என்கிற தகவல் வெளியாகும் என வந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஒருவேளை இந்த மாதம் இல்லையென்றாலும் ஆகஸ்ட் மாதத்தில் உறுதியாக ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு 7 முதல் 7.30 மணி நேரங்களில் பயணித்துவிடலாம் என்றால் மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான விசயம் தானே. அதுமட்டுமின்றி இந்த ரயில் ஆரம்ப நாட்களில் தற்போதைய தகவல்களின்படி, திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 அல்லது 2.30 மணிக்குள் சென்னை வந்து சேர்கிறது. மதியம் 3 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இரவு 10.30 மணிக்குள் திருநெல்வேலி வந்து சேர்கிறது.

இதன்மூலம் இந்த வழித்தடத்தில் 10 மணி நேர பயணம் 2 மணி நேரம் குறைந்து 8 மணி நேரங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News