நெல்லை:பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பாரத.மாதாவை இழிவாக பேசிய பாதிரியார் மீது குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரிக்கை

Update: 2021-07-24 15:05 GMT

பாரத மாதாவை தரக்குறைவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாரத மாதாவை பற்றி மிகத் தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நெல்லை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார்.  ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என . ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து, நெல்லை மாநகர மாவட்ட ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மஹாராஜன் கூறும்போது: ஜார்ஜ் பொன்னையா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத.மாதாவை இழிவாக பேசிய பாதிரியார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் ஓட்டு போட்டதால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்துள்ளார். அதற்காகவே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதமாதா, இந்துமதம், மத்திய, மாநில அரசுகள், உள்துறை அமைச்சர் அமிர்ஷா, பிரதமர் மோடி, தமிழக அமைச்சர்கள், குமரி சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சர்சைக்குரிய பேச்சால் 7 பிரிவுகளின் கீழ் இன்று கைது செய்யப்பட்ட பனைவிளை பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரி பாரதிய  ஜனதா கட்சினர்  ஆர்ப்பாட்டம் நடத்தியது  குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News