நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

Update: 2022-02-07 01:30 GMT

திருநெல்வேலி மாநகராட்சியில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மறுபரிசீலனை 5ம் தேதி முடிவடைந்தது. இதில் நெல்லை மாவட்டத்தில் 2106 பேர் போட்டியிட உள்ளனர்.

70 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இட ஒதுக்கீடு பெறாத முற்பட்ட சமூகங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பல குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆசியோடும், மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் மற்றும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் ஆசியோடும், ஆதரவோடும் 27வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்கள்.

Tags:    

Similar News