பாரதியார் படித்த வகுப்பிற்கு சென்ற காவல் ஆணையர்

Update: 2021-03-26 05:00 GMT

திருநெல்வேலியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் அன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மகாகவி பாரதி படித்த வகுப்பிற்கும் சென்றார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் அன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி தொகுதியில் மட்டும் மொத்தம் 180 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 73 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நெல்லை உடையார்பட்டி, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் அன்பு நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடுவது தொடர்பாகவும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மதித உயர்நிலை பள்ளி வாக்குச் சாவடியில் ஆணையர் ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் மகாகவி பாரதியார் இங்குதான் பாடம் பயின்றார் என்று ஆணையர் அன்புவிடம் கூறினார்கள். இதையடுத்து பாரதி பயின்ற வகுப்புக்கு ஆணையர் சென்ற ஆணையர் அன்பு அங்கு சிறிது நேரம் அமர்ந்தார்.

Tags:    

Similar News