நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-10 06:37 GMT

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலர் முனைவர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணை செயலாளர் ஆர்.எம்.சாந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் அவ்வப்போது அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், இம்மாவட்டத்திலுள்ள அரசு உயர் அதிகாரிகளும் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடையும் விதமாக மிக சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்கள். சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவை பொறுத்தமட்டில் மனுதாரரின் கோரிக்கைகள் பொது நலனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், சட்டமன்ற பேரவை குழுக்களில் மனுக்கள் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகும்.

இம்மனுக்கள் குழு மூலம் பொதுமக்களின் முக்கிய பிரச்சனைகளை தேர்வு செய்து நேரடியாக ஆய்வு செய்திட மனுதாரரையும் அதற்குரிய உயர் அதிகாரி அவர்களை நேரடியாக அழைத்து பல்வேறு பிரச்சனைகளை உடனடியாக தீர்வு செய்யக்கூடிய ஒரு குழுவாக செயல்படுகிறது. இந்த வகையிலே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த மனுக்கள் 263 இதில் தேர்வு செய்யப்பட்ட 92 மனுக்கள் மீது ஆய்வு செய்திடவும், ஏற்கனவே, (2013-14) குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டு பேரவைக்கு அளிக்கப்பட்ட 07 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தகுதியுடைய இதர மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்குழு பரிந்துரை செய்து வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இம்மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக அளிக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் யோ.குமாரதாஸ், கோட்டாட்சியர்கள் சந்திரசேகர் (திருநெல்வேலி), சிந்து (சேரன்மகாதேவி), மற்றும் அரசு அலுவலர்கள், மனுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News