திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள மொத்தமுள்ள 55 வார்டுகளுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-28 06:00 GMT

பைல் படம்.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இவற்றிற்கான வேட்புமனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை இன்று தொடங்கியது. ஒவ்வொரு வார்டிலும் வேட்பு மனுக்களை வாங்க தலா 2 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தச்சநல்லூர் மண்டலத்திலுள்ள 1, 2, 3, 4, 10, 11 ஆகிய வார்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையர் ஐயப்பனிடம் வழங்க வேண்டும். அதேபோல் 12, 13, 14, 28, 29, 30 ஆகிய வார்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளர் லெனின்யிடம் அளிக்க வேண்டும். பாளையங்கோட்டை மண்டலத்தில் 5, 6, 7, 8, 9, 32, 33 ஆகியவற்றுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையர் ஜஹாங்கீர்யிடம் அளிக்கலாம்.

34, 35, 36. 37, 38, 39, 55 ஆகிய வார்டுகளுக்கு வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளர் சாந்தியிடம் அளிக்கலாம். மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31, 40, 41, 42, 43, 44, 45, 46 ஆகிய வார்டுகளுக்கு வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளர் ராமசாமியிடமும், 47, 48, 49, 50, 51, 52, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு வேட்புமனுக்களை நிர்வாக அலுவலர் மாரியப்பனிடம் அளிக்கலாம்.

திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளுக்கு வேட்புமனுக்களை செயற்பொறியாளர் என். எஸ். நாராயணனிடமும் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய வார்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளர் பைஜூயிடமும் அளிக்கலாம் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News