இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

ஏர்மேன் பணிக்கு இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் (Google Forms) அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-20 13:30 GMT

திருநெல்வேலி மாவட்டம் இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விருப்பமுள்ள 17 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்களை (ஆண்கள் மட்டும்) கண்டறிய இந்திய விமானப்படை ஆட்தேர்வு மையம், தாம்பரம் முடிவு செய்துள்ளது. ஏர்மேன் பணிக்கு சேருவதற்கான கல்வித்தகுதி பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். பனிரெண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படையில் சேர விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிக அளவில் இளைஞர்கள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் விமானப்படைக்கான ஏர்மேன் தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஏர்மேன் பணிக்கு சேர விரும்பும் இளைஞர்களின் விருப்பத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் (Google Forms) அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கூகுள் லிங்க் அனுப்பப்படவுள்ளது. எனவே, ஏர்மேன் பணிக்கு சேர விரும்பும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படவுள்ள லிங்க்-வுடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த Google Forms Link NELLAI EMPLOYMENT OFFICE Telegram Channelஇல் பகிரப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி அலுவலகத்திற்கு நேரில் வந்து இந்த கூகுள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம் அல்லது 9942503151 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூகுள் லிங்க் -ஐ பெற்று அதில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News