நெல்லையில் அழகுமுத்துகோன் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்துகோன் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2021-07-11 06:50 GMT

சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள்  விழா இன்று கொண்டாடப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்துகோன் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 வது பிறந்த நாள் விழாவில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ எல் லட்சுமணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News