தாமிரபரணி படித்துறையை சொந்த செலவில் தூய்மைப்படுத்திய அதிமுக மாமன்ற உறுப்பினர்.

தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லும் வழி பாதை மற்றும் படித்துறையை சொந்த செலவில் தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதிமுக உறுப்பினர்

Update: 2022-04-06 15:40 GMT

ஆற்றில் குளிக்க செல்லும் வழி பாதை மற்றும் படித்துறையை சொந்த செலவில் தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதிமுக உறுப்பினர் 

திருநெல்வேலி மாநகராட்சியில் 30வது வார்டில் அதிமுக சார்பில் ஜெகநாதன் என்ற கணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் துணை மேயரும் ஆவார்.

30வது வார்டுக்குட்பட்ட தாமிரபரணி ஆற்று பகுதியான பெருமாள் கோவில் தீர்த்த கட்ட படித்துறை, முத்துமாரியம்மன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை உள்ளிட்ட பகுதியில் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் குளிக்க செல்லும் வழிப்பாதைகள் மற்றும் படித்துறைகள் முள்செடிகள், குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனால் குளிக்க செல்பவர்களுக்கு விஷப்பூச்சிகளால் ஆபத்துகளும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் இருப்பதால் அப்பகுதிகளை எல்லாம் சுத்தப்படுத்தி தரும்படி மாமன்ற உறுப்பினரும், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு சரிசெய்து தருவதாக கூறி உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தனது சொந்த செலவில் தூய்மை பணியை துவங்கினார்.

தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நடைபெற்ற தூய்மை பணிகளை பார்வையிட்டு மக்கள் குளித்து செல்வதற்கு எந்த வித இடையூறும் இல்லாதவாறு சுத்தமாக வேலைகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News