ரேஷன் அரிசி கடத்தல் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் கொலையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

Update: 2022-05-12 01:58 GMT

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுடலை பாண்டி, அடைக்கலம், சிவபாலன்.

நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் கொலையில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் ராஜா நகர் 3 வது தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் வெங்கடாசலபதி என்பவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக அவரது வீட்டின் அருகே 14-04-2022 ம் தேதியன்று, கொலை செய்த வழக்கில், திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த கரியப்பா மகன் சிவபாலன் (44), கணபதி மகன் சுடலை பாண்டி (46) மற்றும் பெருமாள்புரத்தைச் சேர்ந்த அப்பாக்குட்டி மகன் அடைக்கலம் (43) ஆகிய மூன்று பேர் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார், மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் பாலமுருகன், மற்றும் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் படி, மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணை படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News