நெல்லையில் 28வது மெகா தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நெல்லையில் 28வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்காெண்டார்.

Update: 2022-04-30 14:22 GMT

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 28வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 28வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் இன்று 28 வது கோவிட் மெகா தடுப்பூசி திட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் மொத்தம் 157 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2வது தவணை வீடுபட்ட நபர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சுமார் 470 சுகாதார பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் இன்று பத்தாயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 இலட்சத்து 62 ஆயிரத்து 751 பேருக்கு (90.40 சதவீதம் ) முதல் தவணையும், 2 இலட்சத்து 80 ஆயிரத்து 732 பேருக்கு (70.01 சதவீதம் ) 2 தவணைகளும், பள்ளி செல்லும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மொத்தமுள்ள 28 ஆயிரத்து 636 பேரில் முதல் தவணையாக 25 ஆயிரத்து 240 பேருக்கும், (88.14 சதவீதம்) இரண்டாவது தவணையாக 17 ஆயிரத்து 800 பேருக்கு (62.15 சதவீதம்) பேருக்கும், 12 வயது முதல் 14 வயது வரை மொத்தமுள்ள 14, 370 மாணவ- மாணவிகளுக்கு முதல் தவணையாக 8,500 பேருக்கு கார்பேவேக்ஸ் (corBE vax)தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார மையம், ஜான்ஸ் பள்ளி, மற்றும் வி.எம்.சத்திரம் மாநகராட்சி பள்ளி ஆகிய பகுதிகளில் நேரில் சென்று தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களிடம் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News