கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 78 உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ள தன்னார்வலர்கள்

நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Update: 2021-05-13 15:58 GMT

நெல்லை மாவட்டத்தில் நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள். இன்று மட்டும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த எட்டு உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்

இதில் தாழையூத்து பகுதியை சார்ந்த ஒருவர், அம்பை பகுதியை சார்ந்த இருவர் உட்பட எட்டு நபர்கள் அடங்குவர். இதில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் உயிரிழந்தனர் .இரண்டு நபர்கள் நோய் காரணமாக உயிரிழந்தனர், இறந்தவரின் உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலியை தொடர்பு கொண்டு நல்லடக்கம் மற்றும் தகனம் செய்ய உதவி கோரினர்,

இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வல மீட்புக்குழுவினர் அவர்களது உடல்களை பெற்று அவரவர் மதப்பிரகாரம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தாழையூத்து, மேலப்பாளையம்,சாத்தான்குளம்,வி.கே.புரம், பகுதிகளில் நல்லடக்கமும்,வி.எம்.சத்திரம் நவீன எரிவாயு தகன மேடையில் தகனமும் செய்தனர். இன்று காலை தொடங்கிய இப்பணி இரவு வரை நடைபெற்றது.நோன்பு மாதத்தில் நோன்பு வைத்த நிலையிலும் நடைபெற்றது. இதுவரை கொரோனா இரண்டாம் அலையில் இன்று வரை 78 உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News