தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் - கொரனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

பதவியே்ற்று பத்து நாட்கள் தான் ஆகிறது.

Update: 2021-05-17 04:38 GMT

நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவர் இந்து நாடார் வகுப்பைச் சார்ந்தவர். சிதம்பரத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றினார். ஏப்ரல் 26 ஆம் தேதி நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக பதவி ஏற்ற நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 28 ஆம் தேதி முதல் விடுமுறையில் சென்றுள்ளார்.

இறந்துபோன நீதிபதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு வள்ளியூர் மற்றும் நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். உடன்பிறந்த சகோதரி தூத்துக்குடி அருகில் உள்ள சாயல்குடியில் உள்ளார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

#தமிழ்நாடு #Instanews #tirunelveli #tamilnadu #கொரனா #corona #death #CJM #thoothukudi #coronavirus #stayhome #staysafe

Tags:    

Similar News