ஊரடங்கு நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில்.

Update: 2021-05-13 02:46 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு வரகின்றனர்..

கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  தலைமையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு ட்ரோன் கேமரா வழங்கியுள்ளார். இன்று  திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா  தாழையூத்து பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.* இதன்மூலம் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகள்,மற்றும் விளையாட்டு மைதானங்களிலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Tags:    

Similar News