கூடங்குளம் அருகே 50 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாக்களர்களுக்கு சப்ளை?

வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்வதாக புகார் வந்தது.

Update: 2021-10-05 02:10 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் மதுபான கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கூடங்குளத்தை அடுத்த சங்கநேரி கிராமத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் போலீசார் சங்கநேரி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது 3 பேர் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மது பாட்டில்கள் சப்ளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடினர். ஜெபராஜ் என்பவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தப்பி ஓடிய சங்கநேரியை சேர்ந்தசங்கர் (31) மைக்கேல் ராஜ் (35) என 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News