மாலை நேரத்திலும் செயல்பட துவங்கியது திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தை

Organic Farmers Market- திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தை நேற்று முதல் மாலை நேரத்திலும் செயல்பட துவங்கி உள்ளது.

Update: 2022-07-29 11:18 GMT

திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தை பைல் படம்.

Organic Farmers Market- திருச்சி நகரில் தென்னூர் அண்ணா நகர் மற்றும் கே.கே. நகரில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக கொண்டு வந்து எந்தவித கட்டணமும் இன்றி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகள் தினமும் காலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயல்பட்டு வருகின்றன.பொதுமக்களும் தரமான அதே சமயம் விலை குறைவாக இருக்கும் என கருதி இங்கு காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கி வருகிறார்கள் .

இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வேளாண்மை துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை இனி மாலை நேரங்களிலும் இயங்கும் வகையில் செயல்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து திருச்சி கே. கே.நகரில் உள்ள உழவர் சந்தை நேற்று ஜூலை 28ஆம் தேதி முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட தொடங்கியுள்ளது. மாலை நேர உழவர் சந்தையில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் மரச்செக்கு எண்ணெய், பயறு வகைககள்,  காளான் நாட்டுக்கோழி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News