'பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்'- இரா.முத்தரசன்

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்’- என இரா.முத்தரசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2021-11-30 12:21 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

மழை பெய்யும் போது எந்த உதவி செய்யவும் தயார் என கூறும் பிரதமர் பாதிப்பு ஏற்பட்ட பின் வாய் திறப்பதில்லை.

தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண தொகையை முழுமையாக ஜனநாயக அடிப்படையில் தர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையில் மத்திய அரசு செயல்பட கூடாது.

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய  அரசு தான்.ஆனால் பா.ஜ.க வினர் தமிழக அரசு விலையை குறைக்க வேண்டும் என போராடுகிறார்கள். பா.ஜ.கவினர் தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே போராட்டம் நடத்துகிறார்கள்.மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News