வீரகேரளம்புதூரில் ஒரு மாதமாக வழங்கபடாத வாக்காளர் அடையாள அட்டை

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாத காலமாக வழங்காததால் மக்கள் பெறுவதில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Update: 2022-01-29 03:03 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மூலமாக பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அடையாள அட்டை பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தாலுகாவில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக வண்ண வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவதற்கு உரிய பிளாஸ்டிக் அட்டை வழங்குவதற்கான பிளாஸ்டிக் சீட்டுகள் சப்ளை செய்யப்படவில்லை எனவும்‌. ஆகவே மீண்டும் வருமாறு பலமுறை அலைக்கழிக்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை பெற விரும்புவர்கள் பல நாட்கள் அலைந்தும் அட்டை பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

தற்போது கடந்த 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற இந்நிலையில் உடனடியாக வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாக்காளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

Tags:    

Similar News