மது கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-28 08:22 GMT

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்கக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விரைவில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று  அறிவிப்பு செய்திருந்தது. அதன் அடிப்படையில் வருவாய் குறைந்த மதுக்கடைகள், 50 மீட்டருக்குள் அருகருகே இருக்கும் மதுக்கடைகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்கால்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை சில தினங்கள் முன்பு அடைக்கப்பட்டது. மது கடை குறைப்பு திட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்று மதுக்கடையை திறப்பதாக தகவல் பரவியது.

இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் திரண்டு அடைக்கப்பட்ட மதுக்கடையை திறந்தால் வெய்க்கால்பட்டி மது கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து மதுக்கடை முன்பு கூடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News