தென்காசி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2021-09-12 15:24 GMT

தடுப்பூசி பற்றாக்குறையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் முகாமினை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசிகள் இல்லாமல் பொதுமக்களுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆலங்குளம் வட்டார பகுதிகளில் 7000 தடுப்பூசிகளுக்கு பதிலாக 3000 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளது. தென்காசி கீழப்புலியூர் பகுதியில் தடுப்பூசி இல்லாததால் காலை 10.30 மணிக்கு முகாம் முடிவுக்கு வந்தது. இதனால் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் அரியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 10 மணிக்கு மேல் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். குற்றாலம் பேரூராட்சி பகுதியில் தடுப்பூசி இல்லாததால் சுகாதாரப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் சொக்கம்பட்டி பகுதியிலும் போதியளவு தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இதே நிலை நீடித்து வந்தது.

தடுப்பூசி இல்லாத பகுதிகளில் மக்களின் தகவலை சேகரித்து நாளை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News