கடையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்டம் நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-01 05:15 GMT

பைல் படம்.

இன்று காலை 9மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

ரவண சமுத்திரம் ஹிதயத்துல்லா தொடக்கப்பள்ளி, பொட்டல் புதூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, கருத்தப்பிள்ளையூர் சமுதாய நலக்கூடம், சம்பங்குளம் பள்ளிவாசல் கல்யாண மண்டபம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் மற்றும் கடையம், பாப்பாங்குளம், கோவிலூத்து ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.  

Tags:    

Similar News