தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா நடைபெற்றது.

Update: 2022-04-27 06:19 GMT

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு  சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் நடப்பட்டன .

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் அவர்கள் தலைமையில் சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் நடப்பட்டன .

மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மரக்கன்றுகளை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், பசுமை தென்காசி இயக்கம் , தென்காசி 9 வது வார்டு கவுன்சிலர் , இணைந்து மருத்துவமனைக்கு வாகை மரக்கன்றுகள் , அலங்கார செடிகள் மற்றும் இயற்க்கை உரம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் . மேலும் நகர்மன்ற தலைவர் அவர்களிடம் மருத்துவமனை வளாகம் முழுவதும் இயற்கை சோலையாக மாற்றுவதற்கான வழிவகை செய்வதற்கான கோரிக்கையினையும் வைத்துள்ளார் .

இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் ராஜேஷ் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி பத்மா ,  திருப்பதி , திருமதி முத்துலட்சுமி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . இவர்களுடன் 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர்மீரான்,1 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுல்தான் ஷெரிப் காமில், "பசுமை தென்காசி " முகமது முஸ்தபா,13 வது நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.வின்சென்ட், , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இள.பாபுவேலன் , சாரல் ரத்த தான கழகம் அன்சாரி, பசுமை இலத்தூர் கனகராஜ், சண்முக ராஜ் அனைவரும் கலந்து கொண்டனர் .

மருத்துவமனைக்கு தேவையான மரக்கன்றுகளை வழங்கி நட்டு கொடுத்த அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றியினையும் பாராட்டிகளையும் தெரிவித்தார்.

Tags:    

Similar News