தென்காசி மாவட்டத்தில் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் 13 பேர் இடமாற்றம்

தென்காசி மாவட்டத்தில் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-07-21 12:30 GMT

 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் 

தென்காசி மாவட்டத்தில் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யதுடன்; 4 பேரை புதிதாக நியமித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலைய எல்லை களிலும்,காவல் நிலையங்களிலும் நடக்கும் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்க தனிப்பிரிவு தலைமை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை சேர்ந்த தனிப்பிரிவு தலைமை காவலர்கள் சிலரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் 13 தனிப்பிரிவு தலைமை காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதுதவிர 4 பேர் புதிதாக தனிப்பிரிவு தலைமை காவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்படி குற்றாலம் விக்னேஸ் குமார் தென்காசிக்கும், அங்கு பணியாற்றிய முத்துராஜ் குற்றாலத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல் இலத்தூர் செந்தில் ரமேஷ் அச்சன்புதூருக்கும், சாம்பவர் வடகரை ராமச்சந்திரன் ஆய்குடிக்கும், அங்கு பணியாற்றிய நரசிங்கம் சாம்பவர் வடகரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் பாவூர்சத்திரத்தில் பணியாற்றிய மணிகண்ட பிரபு சுரண்டைக்கும், சுரண்டை பாலமுருகன் பாவூர்சத்திரத்திற்கும், ஆழ்வார்குறிச்சி ரவி கடையத்திற்கும், அங்கு பணியாற்றிய ரவி ஆழ்வார்குறிச்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் கே.வி.நல்லூர் காசிராஜா சங்கரன்கோவில் டவுனுக்கும், அங்கு பணியாற்றிய இசக்கிமுத்து குமார் கே.வி.நல்லூருக்கும், அய்யாபுரம் வெங்கடேஷ் திருவேங்கடத்திற்கும், சங்கரன் கோவில் தாலுகா வேல்முருகன் அய்யாபுரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதவிர புளியரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய அரவிந்த் செங்கோட்டை தனிப்பிரிவுக்கும், கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய வேலாயுதம் சொக்கம்பட்டிக்கும், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மாரிச்சாமி சங்கரன்கோவில் தாலுகாவுக்கும், ஷேக் மஜித் ரகுமான் கடையநல்லூர் தனிப்பிரிவு  தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News