தொடர் மழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தொடர் மழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.

Update: 2023-07-04 06:45 GMT

குற்றால அருவியில்  ஆனந்தமாக குளிக்கும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சாரல் மழையுடன் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். அருவிகளில் கூட்டம் காரணமாக குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை கால தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக குற்றால சீசன் மந்தமாக இருந்து வந்தது.

தற்போது சாரல் மழையுடன் குளுமையான சூழல் நிலவி வருவதோடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றருவி ஆகிய அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரிலும் சாரல் மழையுடன் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து வருகின்றனர். ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குற்றால சீசனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News