தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்

தென்காசி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-22 11:19 GMT

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிப்பர் லாரிகள்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிப்பர் லாரிகள் உரிமையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும். எரிபொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. அரசுகள் உடனடியாக விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News