தென்காசி நகராட்சி நகர மன்ற கூட்டம் பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

BJP Meeting Today- தென்காசி நகராட்சியின் நகர மன்ற கூட்டம் தலைவர் சாதிக் தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாஜ உறுப்பினர்கள் மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-02 04:42 GMT

தென்காசி  நகராட்சியின் நகரமன்ற கூட்டம் தலைவர் சாதிக் தலைமையில் நடந்தது.

 BJP Meeting Today- தென்காசி நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகரில் பன்றி மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டில் மின் உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர் முகமது ராசப்பா நூதன முறையில் பல்புகளை மாலையாக அணிவித்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கர்மவீரர் காமராஜர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது போல் காலை சிற்றுண்டி உணவை கொண்டு வந்ததற்கு தமிழக முதல்வருக்கு நகர்மன்ற உறுப்பினர் ரபீக் நன்றி தெரிவித்தார்.மின் உயர்வை கண்டித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் அரிக்கேன் விளக்கோடு நகரமன்ற கூட்டத்திலிருந்து புறக்கணித்து வெளியேறினர்.  இந்நிலையில் அவர்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் ஜிஎஸ்டி, கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர் இதனால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News