பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றகை

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

Update: 2021-11-09 08:11 GMT

தென்காசி நகராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், தமுமுக மாவட்டச் செயலருமான முகமது சலீம் தலைமை தாங்கினார்.

10-வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இரண்டு மாத காலமாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்வதால் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் உடைந்த பாலத்தை சரி செய்ய வேண்டும். வடிகால் நீரோடை உடைப்பு ஏற்பட்டு தெரு பகுதிகளுக்குள் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமுமுக-வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News