தமிழக அரசைக்கண்டித்து பிச்சையிடும் போராட்டத்தை நடத்திய பாஜகவினர்

மத்திய ஆளும் பாஜக அரசுக்கும், தமிழகத்தை ஆளும் திமுக அரசிற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடிக்கிறது

Update: 2023-09-07 05:30 GMT

தமிழக அரசை கண்டித்து தென்காசியில் பிச்சை அளிக்கும் போராட்டத்த்தில் ஈடுபட்ட பாஜகவினர் 

பட்டியல் இன சமுதாய மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிச்சை அளிக்கும் போராட்டத்தில்  பாஜகவினர் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், தமிழகத்தை ஆளும் திமுக அரசிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலையை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், என் மண் என் மக்கள் என்ற இரண்டாம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். இந்நிலையில் அதே மாவட்டத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினார்.தற்போது உள்ள அரசியல் களத்தில் சனாதான தர்மம் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு, தமிழகத்தில் வசித்து வரும் பட்டியல் இன மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கிய நிதியை பட்டியல் இன மக்களுக்கு முறையாக பயன்படுத்தாமல், திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்ட பாஜகவினர் சார்பில் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்காசி புதிய பேருந்துநிலையம் எதிரே பிச்சை அளிக்கும் போராட்டமானது நடைபெற்றது.

பாஜக பட்டியல் அணி சார்பில்  நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று தமிழக அரசருக்கு எதிராகவும், சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து திமுக அரசு செய்து வரும் பல்வேறு மக்கள் விரோத செயல்கள் குறித்து பட்டியலிட்டு பேசிய பாஜகவினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முடித்தனர்.

Tags:    

Similar News