உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி கலெக்டர்எச்சரிக்கை

பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு இல்லை.

Update: 2021-05-21 11:35 GMT

டிஏபி உரம் மாதிரி படம்.

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உட்பட அனைத்து இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது யூரியா 4560 மெட்ரிக் டன் டி.ஏ.பி 510 மெட்ரிக் டன், பொட்டாஷ் 990 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2670 மெட்ரிக் டன் தனியார் விற்பனை நிலையங்களிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாட்களிலும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வேளாண்மைப் பணிகளுக்கான இடுபொருட்களான உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்ட விலையிலேயே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு ஏதுவும் செய்யாமல் மானியத்துடன் பழைய விலையாகிய மூடை ஒன்றுக்கு ரூ.1200- என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் என அனைத்து உர விற்பனையாளர்களையும் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News