மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியில் கைது : தென்காசி போலீசார் பலே ஐடியா!

மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியுடன் தென்காசி போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-16 05:33 GMT

தென்காசி அருகே குளத்தின் நடுவில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் பிடிக்க சென்றனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தென்காசி பச்ச நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என  சாகுல் ஹமீது பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் சாகுல் ஸ்ரீமீது தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக  தென்காசி போலீசார் சாகுல்ஹமீதுவை  தீவீரமாக தேடி வந்தனர். எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது . மேலும் இன்று காலை அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களை மிரட்டி வருவதாக தகவல் வந்ததையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ்  தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர்  பாலமுருகன்  சாகுல் ஹமீதுவை உடனடியாக கைது செய்ய ஆலோசனை செய்து பறக்கும் கேமரா வசதியுடன் ஆய்வாளர்  பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர் முத்துராஜ், மாரியப்பன் குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் தேடினர்.

அப்போது அங்கு  அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை சினிமா பாணியில் மிகுந்த சிரமத்துடன் கைது செய்தனர் .

தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ரவுடியை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து துணிச்சலாக கைது செய்த தென்காசி காவல் நிலைய போலீசாரின் இந்த துணிவு மிக்க செயலை அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்

Tags:    

Similar News